ஈரோடு, பிப். 18- மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்கள் மூலம் பொதுமக்க ளிடம் ஏற்படுத்த கோபி மதுவிலக்கு காவல் துறையினர் புதிய முயற்சியை ஏற்படுத்தி யுள்ளனர். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவ தால் ஏற்படும் விபத்துகள், உயிரிழப்புகள் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் பொருளாதார இழப்புகள் என பல்வேறு தீமைகள் ஏற் பட்டு வரும் நிலையில், இவற்றைத் தடுக்க மதுவிலக்கு காவல் துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின் றனர். இதன் ஒரு பகுதியாக கோபி மது விலக்கு பிரிவு ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் மதுவிலக்கு காவல் துறை யினர் கோபியில் உள்ள நகராட்சி மேல்நி லைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி யினை நடத்தினர். இந்நிகழ்ச்சியில் மாண வர்களிடம், பெற்றோர், உறவினர்கள் மற் றும் நண்பர்கள் மது அருந்தினால் அவர்க ளிடம் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். கோடை விடுமுறை நாட்களில் மாணவர் கள் ஒவ்வொருவரும், மதுவால் பாதிக்கப் பட்ட ஒருவரையாவது மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி, அவர்களை மது பழக்கத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என காவல் துறையினர் தெரிவித்தனர். இத னைத்தொடர்ந்து காவல் துறையினர் மற் றும் மாணவர்கள் மது பழக்கத்தை ஒழிப் பது குறித்த உறுதிமொழி ஏற்றனர்.